புதுமை விரும்பி
இந்த வலைப்பதிவில் தேடு
ஞாயிறு, 16 ஜனவரி, 2011
கையேந்தும் இளம் கன்றுகள்
கொஞ்ச நாட்களுக்கு முன் பேருந்து நிலையத்தில் நான் கண்ட காட்சி நெஞ்சை பதறவைக்கும் வகையில் இருந்தது. பதினான்கு வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாயக் கல்வி , குழந்தை தொழிலாளர் ஒழிப்பு என நமது அரசு பல திட்டங்களை நடைமுறை படுத்தி வருகிறது. எனினும் பேருந்து நிலையங்களில் மூன்று வயது கூட நிரம்பாத குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் அவலம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பேருந்து நிலையத்தை சுற்றிலும் இது போன்று குறைந்தது பத்து குழந்தைகளாவது நடமாடுகின்றனர். அக்குழந்தைகள் வெளிமாநிலங்களில் இருந்து கடத்தப் பட்டவர்கள் போல் தெரிகிறது. வந்து போகின்ற மக்களின் கால்களை பிடித்துகொண்டு பிச்சை கேட்டு தொந்தரவு செய்கின்றனர் . பாவம் என்று பரிதாபப்பட்டு , எதாவது கொடுத்து விட்டு பேருந்தில் ஏறினால் அங்கு இரண்டு மூன்று குழந்தைகள் ஏதாவது தாங்க என்று காசும் தரும் வரை காலை பிடித்துக்கொண்டு விடுவதே இல்லை. காசு கொடுக்கவில்லையென்றால் ,வயதில் பெரியவர்கள் என்று கூட பாராமல் திட்டி விட்டு அடுத்த இடத்தை நோக்கிச் செல்கின்றனர். அக்குழந்தைகள் ஏதோ ஒரு கும்பலால் கடத்தப்பட்டு , அவைகள் மூலம் அனுப்பப் படுவது போலதான் தெரிகிறது. நாளைய இந்தியாவின் நம்பிக்கை தூண்களான பிஞ்சுகளுக்கு கல்வியைவிட பாதுகாப்புதான் முக்கியம். அரசு இதற்கு தக்க நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்.
சனி, 15 ஜனவரி, 2011
பொங்கட்டும் தமிழியமும், தமிழுணர்வும்
மாவிலை தோரணம் கட்டி ,மண்பானையில் பொங்கல் வைத்து,பசுவிற்கு படையலிட்டு, ஊர் கூடி உணவுண்டு, உரி அடித்து ,காளை அடக்கி ,காகத்திற்கும் கனுப் பொங்கல் வைத்து கொண்டாட வேண்டிய பொங்கல் பண்டிகை இன்று நான்கு சினிமா , நடிகர்களின் பெட்டி,எசெமஎஸ்இல்
பொங்கல் வாழ்த்தோடு முடிகிறது. நமது பாரம்பர்ய வழக்கங்களை கூட இன்று ஊடகங்கள் நினைவு படுத்தும் நிலையில்தான் பலரும் இருக்கிறோம். வெளிநாட்டவர்கள் நமது கலாச்சாரத்தின் பெருமை உணர்ந்து போற்றிகொன்டிருக்க நாமோ தடம் மாறும் மேற்கத்திய நாகரிகத்தில் மூல்கியிருகிறோம். திக்கெட்டும் புகழ் மனம் பரப்பும் நமது தமிழ் பாரம்பர்யத்தையும் , கலாச்சாரத்தையும் மறவாமல் பின்பற்றி வாழ்வில் முன்னேறுவோம். தமிழர்களுக்கும், தமிழை போற்றுபவர்களுகும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

நிகழ்கால நிஜங்கள்
பெற்றோர்களை முதியோர் காப்பகத்திற்கு அனுப்பும் பிள்ளைகளை சாடி இருந்த பத்திரிகையின் இறுதி பக்கத்தில் "பூவுலகில் ஒரு சொர்க்கம் - அன்பு முதியோர் இல்லம் " விளம்பரம்
சனி, 25 டிசம்பர், 2010
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)